மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன ஆர்.லட்சுமிபதி கோரிக்கை

மதுரை: கொரோனா அச்சத்தில் ஊரடங்கில் உள்ள பொதுமக்களுக்கு செய்ய வேண்டியது குறித்து பிரதமர் மோடிக்கு தினமலர் சார்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

பிரதமர் நேற்று முன் தினம் நாடு முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பின்னர் இரவு 8:40 மணிக்கு தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியுடன் தனியாக அலைபேசியில் பேசினார். கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி நம்பகமான செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லும் தினமலர் பணியை பிரதமர் பாராட்டினார்.

பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக அறிவித்த 21 நாள் ஊரடங்கு ஆகியவற்றை லட்சுமிபதி குறிப்பிட்டு பிரதமருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அப்போது தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு செய்ய வேண்டியது பற்றிய யோசனைகளை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து கீழ்க்காணும் கோரிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பிரதமருக்கு அனுப்பினார்.